Nakkheeran
“மேலும் 81 ஊழியர்கள் சஸ்பெண்ட்” - டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு!
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக 10 ரூபாய் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை விதித்து, காலி பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும் போது அந்த 10 ரூபாயை வாடிக்கையாளர்களிடம் மீண்டும் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த காலி பாட்டில் ஸ்கேனிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போதிய ஸ்கேனிங் கருவிகள் வழங்கப்படவில்லை எனக் கூறியும் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு உத்தரவை மீறித் தொடர்ந்து கடைகளைத் திறக்காமல் போராட்டம் நடத்தியதால், முதற்கட்டமாக 160 ஊழியர்கள் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் காலி மதுப…