உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ரூ.19 லட்சம் பறிமுதல்” - சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

சென்னை உட்படத் தமிழகம் முழுவதும் பல்வேறு சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பதிவுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சென்னையில் அண்ணாநகர், குன்றத்தூர், பம்மல், பெரியமேடு, சைதாப்பேட்டை, நீலாங்கரை, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், கோவை, மயிலாடுதுறை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அதோடு சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகள் முறையாகப் பணியா…