Nakkheeran
“தி.மு.க. பெண் கவுன்சிலருக்கு நிபந்தனை முன்ஜாமீன்” - உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகியும் சென்னை கவுன்சிலருமான சுதா தீனதயாளன், முதல்வர் விஜய் குறித்துத் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில், த.வெ.க. துறைமுக பகுதி செயலாளர் உதயகுமார் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனையடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் பேரில், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவ…