உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தமிழர்களை இலக்கு வைக்கும் இலங்கை அரசு: இந்திய தரப்பிடம் சிறிநாத் எடுத்துரைப்பு

இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் மத உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இவ்விடயங்கள் தொடர்பில் இந்திய நிதியமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பிலுள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.