Daily Thanthi
ஆவின் நெய், வெண்ணெய் விலை ரூ.100 வரை உயர்வு: எரியும் விலைவாசி உயர்வுத் தீயில் எண்ணெய் ஊற்றுவதா? - அன்புமணி
சென்னை, வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறுமாறு ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட 63 வகையான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அரிசி உள்ளிட்ட…