Samayam Tamil
சென்னையில் ஸ்கேனர் கருவி மக்கர்: மது பிரியர்களை சமாளிக்க முடியாமல் டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களுக்கான 10 ரூபாய் திரும்ப பெறும் கட்டணத்தை, மதுபானத்தின் அதிகபட்ச சில்லறை விலையுடன் சேர்த்து வசூலிக்கும் நடைமுறை நவ.1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. காலி பாட்டில்களை திரும்ப பெறும்போது அதை ஸ்கேன் செய்து கணக்கிடும் புதிய தொழில்நுட்பமும் ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.