Indian Express Tamil
5 குரல்களில் பேசிய ஒரே நபர்; திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது எப்படி? மனம் திறந்த நடிகை பூர்ணா
பிறப்பால் மலையாளியான நடிகை பூர்ணாவுக்கு, பெரிய அடையாளம் கொடுத்தது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தான். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் பிளாக்பாஸ்டர் திரைப்படமான ஜெயிலர் 2-வில் ரஜினிகாந்துடன் “ஆலா போலேலோ” பாடலில் இவரது நடனம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: சமீபத்தில் பூர்ணா தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். 2020-ஆம் ஆண்டில், திருமண வரன் என்ற போர்வையில் தங்களை அணுகி, தன்னிடமும், தனது குடும்பத்தினரிடமும் ஒரு கும்பல் பணம் பறிக்க முயன்றதாக அதிர்ச்சிகரமான அனுபவத்தை நினைவுகூர்ந்தார். திருச்சூரை மையமாகக் கொண்டு திருமண மோசடிகளி…