Nakkheeran
அதிபர் டிரம்பின் ஆட்சிக்கு குறி?; உலகமே உற்று நோக்கும் அமெரிக்க இடைக்கால தேர்தல்!
உலகமே உற்று நோக்கும் அமெரிகக் இடைக்கால தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (03-11-26) தொடங்கவுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தப் போவது யார்? என்ற பரபரப்புடன் இந்திய நேரப்படி இன்று மாலை 4:30 மணிக்கு இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்த தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. கீழவையான பிரதிநிதிகள் சபையின் அனைத்து 435 இடங்களுக்கும், மேலவையான செனட் சபையின் மொத்தம் 100 இடங்களில் காலியாகும் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு தொடங்க உள்ளன. நாளை (நவ.4) அதிகாலை முதல் தேர்தல் முடிவுகள் வெள…