Polimer News
ஆந்திராவில் ஓங்கோல் அருகே முழுமையாகக் கரையைக் கடந்தது முரசுப் புயல்...
வங்கக் கடலில் உருவான முரசு புயல், தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் அருகே கரையைக் கடந்தது. நள்ளிரவில் புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. புயல் கரையைக் கடந்தாலும், பிற்பகல் வரை நெல்லூர், பிரகாசம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட ஆந்திர தென் கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. முரசு புயல் கரையைக் கடக்கும் வேளையில், சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதிலும், இரவு முதல் வறண்ட வானிலையே தொடர்கிறது. அதே வேளையில், பு…