உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஃபிரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு கருப்பாக மாறுகிறதா? இதுதான் காரணம்... நிறம் மாறாமல் தடுக்க 8 டிப்ஸ்

பல வீடுகளில் இரவு நேரத்திலேயே சப்பாத்தி மாவைப் பிசைந்து ஃபிரிட்ஜில் வைத்து, மறுநாள் காலை அல்லது மதியம் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, காலையில் அவசரமாக வேலைக்குச் செல்பவர்கள், குழந்தைகளுக்குப் பள்ளிக்குச் செல்லும் முன்பு உணவு தயாரிப்பவர்கள் எனப் பலருக்கும் இந்தப் பழக்கம் உதவியாக இருக்கிறது. ஆனால், சில நேரங்களில் ஃபிரிட்ஜில் வைத்த சப்பாத்தி மாவு கருப்பு அல்லது சாம்பல் நிறமாக மாறியிருப்பதைப் பார்த்திருப்போம். இதனால் மாவு கெட்டுப்போய்விட்டதா, இதைப் பயன்படுத்தலாமா அல்லது தூக்கி எறிய வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படும். உண்மையில், மாவின் நிறம் மாறுவதற்குப் பின்னால் சில இயற்கையான…