Polimer News
புஸ்வானம், தரைசக்கரம் உள்ளிட்ட பல்வேறு பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு? உற்பத்தியாளர்கள் விளக்கம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், புஸ்வானம், தரைச்சக்கரம், பேன்சி பட்டாசுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். விதிமீறல் புகார்கள் காரணமாக ஏராளமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதுடன், தொழிலாளர்கள் பற்றாக்குறையும் நிலவி வருகிறது. இதனால், வழக்கத்தைவிட பட்டாசு உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.