Nakkheeran
”இலவச மின்சார சலுகையை விட்டுத்தர வேண்டும்”; முதல்வர் வேண்டுகோள்
மாநில அரசு மின் மானியத்திற்காக ஏறக்குறைய பல ஆயிரம் கோடிகளைச் செலவிடுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வருமான வரி செலுத்தும் நபர்கள் மின் கட்டண சலுகையை விட்டுத்தர வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சாம்ராட் சவுத்ரி, ”மாநில அரசு மின் வாரியத்திற்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய ரூ.23,000 கோடிகளைச் செலவிடுகிறது. அதில், சராசரியாக ஒரு குடும்பத்திற்காக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அரசு செலவிடுகிறது. தற்போது அனைத்து தரப்பினருக்கும் 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், வசதி படைத்தவர்கள் இச்…