Daily Thanthi
பாலிவுட் நடிகர் துஷார் கபூரிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
மும்பை, பாலிவுட் பிரபல நடிகர் துஷார் கபூருக்கு தொலைபேசி மூலம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 5 கோடி கேட்டு மிரட்டல் மும்பையின் பிரபல பாலிவுட் நடிகராகத் திகழ்பவர் நடிகர் துஷார் கபூர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 'ஹாரி பாக்ஸர்' என்று…