Daily Thanthi
தீபாவளி பண்டிகை உருவானது எப்படி.? அதன் வரலாறு என்ன.? - முழு விபரம்
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். தீபாவளி பண்டிகை உருவானதற்குக் காரணம் தீமை அழிந்து நன்மை வென்றதைக் கொண்டாடுவதே ஆகும். சமஸ்கிருதத்தில் 'தீபம்' என்றால் விளக்கு, 'ஆவளி' என்றால் வரிசை என்று பொருள். இதனால் இது 'தீபங்களின் வரிசை' அல்லது 'தீப ஒளித் திருநாள்' என்று அழைக்கப்படுகிறது…