உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”பாதிக்கப்பட்டவரின் மீதே பொய் வழக்கா?; அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரை, திரும்ப பெறக்கோரி மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர்கள் இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வடபழனி, குமரன் காலனியில் 1,800 சதுர அடி நிலத்துக்கு போலியான சில ஆவணங்கள் தயாரித்ததாக எஸ். சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வடபழனியைச் சேர்ந்த பால்துரை உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பால்துரை முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி என்.ரமேஷ், பால்துரை மீதான புக…