Indian Express Tamil
'வழக்கறிஞர் நியமன ஊழல், மின்வெட்டு, சிறைக் கைதிகள் ஓட்டம்'; 3 துறைக்கும் ஒரே அமைச்சர்': நிர்மல் குமாரை குறி வைத்து தாக்கிய இ.பி.எஸ்
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசையும், சட்டத்துறை, மின்துறை மற்றும் சிறைத்துறையை கவனித்து வரும் அமைச்சர் நிர்மல் குமாரையும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், சிறைச்சாலைகளில்கூட பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத நிலையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பிய…