Indian Express Tamil
மாதிரிப் பள்ளிகள் டூ வெற்றிப் பள்ளிகள்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க அரசு
தமிழகத்தில் அரசு மாதிரி பள்ளிகள் இனி 'வெற்றிப் பள்ளிகள்' என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. த.வெ.க அரசு அமைந்த பிறகு பல்வேறு திட்டங்களின் பெயர்களில் 'வெற்றி' என்ற சொல் சேர்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த பெயர் மாற்றமும் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களின் தரத்தை அதிகரிக்கும் வகையில், 2021-22 கல்வி ஆண்டில் தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திற்கு 1 மாதிரிப் பள்ளி என்ற விதம் 38 மாவட்டங்கள் மாதிரிப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு சுமார் 2,000 மாணவர்கள் வரை பயின்று வருகின்றார்கள். இப்பள்ள…