Puthiya Thalaimurai
அதிகரிக்கும் விலைவாசி.. வரியில்லாமல் இறக்குமதி.. குறைகிறதா சர்க்கரை விலை?
செய்தியாளர் - M.மீரா இந்தியாவில் விவசாயத்தைப் பெரிதும் நம்பியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் பல பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் மண்ணில் ஈரப்பதம் குறைந்துள்ளது. இதனால் நெல், கோதுமை, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயிர்களை விதைப்பதில் விவசாயிகள் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர். இந்த ஆண்டு சராசரியைவிடக் குறைவான பருவமழை பெய்துள்ளதால்…