Indian Express Tamil
விஜய் ரோடு ஷோ: 'வரவு எட்டணா, செலவு பத்தணா' பாடலை குறிப்பிட்டு விமர்சித்த நல்லசாமி
தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நல்லசாமி இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, முதல்வர் விஜய் நடத்தும் ரோடு ஷோவை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது:- நாட்டில் பிரதமர் முதல் நடிகைகள் வரை அனைவரும் ரோடு ஷோ செல்கின்றனர். காரின் மேற்கூரையை திறந்து பறக்கும் முத்தங்களை தருகின்றனர். கூடியிருக்கும் மக்களும் பறக்கும் முத்தங்களை தந்து முத்தமழையில் நனைகின்றனர். இதனால் எவ்விதப் பயனுமில்லை. போக்குவரத்தும், மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும். முதல்வர் விஜய் புதுக்கோட்டைக்கு நேற்று சென்றது. பாமா…