Indian Express Tamil
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்தது தூத்துக்குடி நீதிமன்றம்!
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுக முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரை விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருடன் சேர்த்து வழக்கில் தொடர்புடைய மொத்தம் 7 நபர்களும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.2.68 கோடி முதல் ரூ.4.90 கோடி வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தூத்துக்குடி நீதிமன்றத்தில்…