Indian Express Tamil
இடியாய் இறங்கிய 8 வயது மகள் மரணம்; உடைந்த போன சித்ரா: இசை உலகிற்கு லதாவும், இளையராஜாவும் மீண்டும் அழைத்து வந்தது எப்படி?
பின்னணிப் பாடகி கே.எஸ். சித்ரா, தனது மகள் நந்தனாவை இழந்த துயரத்திலிருந்து இன்றுவரை முழுமையாக மீளவில்லை என்று தெரிவித்துள்ளார். மகளின் மறைவுக்குப் பிறகு பாடுவதையே நிறுத்தியிருந்த அவர், மீண்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்குவதற்கு பாடகர் லதா மங்கேஷ்கரும் இசையமைப்பாளர் இளையராஜாவும் முக்கியப் பங்காற்றினர். தனது வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த இழப்பையும், அந்தத் துயரத்தைக் கடந்து வாழ்வதற்கு இசை எவ்வாறு உதவியது என்பதையும் சித்ரா பகிர்ந்துள்ளார். தனது குரலாலும் பாடல்களாலும் பலரது வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் கே.எஸ். சித்ரா. பலரது கடினமான காலங்களிலும் அவரது பாடல்கள் ஆறுதலாக இருந்துள்ளன.…