உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிக் கடன் இணைப்பு நிதி வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (03.11.2026) பங்கேற்றார். அப்போது மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து, இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பெருந்துறையிலிருந்து கோவை விமான நிலையத்திற்குச் சாலை மார்க்கமாக முதலமைச்சர் விஜய் புறப்பட்டார். அப்போது, திடீரென கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி காவல் நிலையத்திற்குள் சென்ற அவர், அங்கு பராமர…