உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'ஒரு பக்கம் குழந்தைகள் மாயம்-மறுபக்கம் கைதிகள் ஓட்டம்';இதுதான் டம்மி முதல்வரின் சாதனை-உதயநிதி கண்டனம்

தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் இரவு நேரத்தில் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தற்பொழுது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி உள்ளது. காரணம் தமிழகத்திலேயே முதல் முறையாக 17 கைதிகள் ஒரே நேரத்தில் சிறையில் இருந்து தப்பிய சம்பவம் இதுவாகும். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக…