Nakkheeran
பராமரிப்பு தொகை தர மறுத்த கணவர்; வழக்கில் நடந்த திருப்பம்- வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:111
குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி நம்மிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தான் சந்தித்த ஒரு வழக்கு பற்றிய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துள்ளார். கிராமப்புறத்தில் பணியாற்றிய டாக்டர் அரவிந்த் அவர்களுடைய வழக்கு இது. அந்த கிராமத்தில் எல்லா வகையான நோய்க்கும் அடிப்படையான ஒரே மருத்துவராக இவர் தான் இருந்தார். இதனால் எந்நேரமும் மருத்துவமனையே கிடையாய் கிடந்தவரின் மீது மனைவிக்கு எரிச்சல் வருகிறது. அதனால் அது குறித்து தினமும் பேசி சண்டை வருகிறது. இவரும் தன் பங்கிற்கு தன் வேலையின் முக்கியத்துவம் அவசியம் குறித்து எட…