உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சிறுமி மாயமான வழக்கு : லாரி டிரைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த மாதம் 12ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். சிறுமி காணாமல் போய் தற்போது வரை 23 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை அவரைக் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கை கடந்த 12 நாட்களாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட நபர்களிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு தொலைபேசி அழைப்புகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, நேற்று சிறுமியின் வீட்டு…