Indian Express Tamil
ஃபிரிட்ஜ் டயலை எப்பவும் 3-லேயே வைக்கிறீங்களா? வெயில், குளிருக்கு எந்த நம்பர் சரி தெரியுமா?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகள், பழங்கள், பால், தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். ஆனால், ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை வைத்திருந்தும் அவை விரைவாகக் கெட்டுப்போவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, குளிர்சாதனப் பெட்டியின் வெப்பநிலை சரியாக அமைக்கப்படாமல் இருப்பதாகும். குறிப்பாக, ஃபிரிட்ஜில் இருக்கும் டயலை எந்த எண்ணில் வைக்க வேண்டும், கோடைக் காலத்தில் குளிரை அதிகரிக்க வேண்டுமா, குளிர்காலத்தில் குறைக்க வேண்டுமா என்ற கேள்விகள் பலருக்கும் எழுகின்றன. உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இர…