Indian Express Tamil
த.வெ.க-வில் 70 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி; நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் தி.மு.க ஆதரிக்கும்: ரகுபதி பகீர் பேட்டி
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரகுபதி, ஆளும் த.வெ.க அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களில் 60 முதல் 70 பேர் வரை தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு தி.மு.க முழு ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: புதுக்கோட்டையில் புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் உள் விளையாட்டு அரங்கம் ஆகிய இரண்டு…