Nakkheeran
“பெயர் மாற்றத்தால் மாணவர்களுக்கு என்ன கூடுதல் நன்மை கிடைக்கப்போகிறது?” - வானதி சீனிவாசன் கேள்வி!
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்தவுடன், ஏற்கெனவே தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களின் பெயர்களில் 'வெற்றி' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு மாதிரிப் பள்ளிகள் இனிமேல் 'வெற்றி பள்ளிகள்' என்று அழைக்கப்படும் வகையில் அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில் 38 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளின் பெயரை ‘வெற்றிப் பள்ளிகள்’ எ…