Hindu Tamil Thisai
ரிலீசுக்கு முன்பே ரூ.665 கோடி ஈட்டிய ஷாருக்கானின் ‘கிங்’
மும்பை: சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'கிங்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, அதன் வணிக உரிமைகள் மூலமாக ரூ.665 கோடி வரை ஈட்டி சாதனை படைத்துள்ளது. வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் உரிமங்களை வாங்குவதற்கு உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் கடும் போட்டி நிலவியது. ஷாருக் கானின் பிறந்தநாளான நவம்பர் 2 அன்று, இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு விளம்பரப் பணிகள் தொடங்கப்பட்டன…