Nakkheeran
“ரயிலில் படுக்கை வசதியைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மனைவியுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே படுத்து உறங்க அனுமதி என்ற விதியைக் காரணம் காட்டி, அவரது மனைவி படுக்கை வசதியைப் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு இன்று (03.11.2026) வந்தது. அப்ப…