உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2027 மார்ச்சில் கோயம்பேடு - ஆலந்தூர் மெட்ரோ சேவை: தீவிரமடையும் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகள்

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில், கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான பாதையில் முக்கிய முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருகின்றன. தோராயமாக 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த உயர்த்தப்பட்ட ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளை நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழுமையாக முடித்துவிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, 2027-ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் இந்தச் குறிப்பிட்ட பாதையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரயில் சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 118.9 கிலோமீட்டர் தொலைவைக் கொண்ட இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டமானது மூன்று வழித்…