Dinamani
பழனி கோயிலில் இன்று முதல் ரோப்காா் சேவை
பழனி கோயிலில் ரோப்காா் சேவை புதன்கிழமை (நவ.4) முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக படிப் பாதைக்கு மாற்றாக ரோப்காா், மின் இழுவை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் என பலரும் இந்த ரோப்காா் சேவையை பயன்படுத்தி வருகின்றனா்…