Indian Express Tamil
கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் வெள்ளப்பெருக்கு: வீடுகளுக்குள் புகுந்த கழிவுநீர்; தொற்றுநோய் அச்சத்தில் மக்கள்
கோவை செல்வபுரம் அருகே உள்ள செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறிய மழைநீர் கழிவுநீருடன் கலந்து குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விஷ ஜந்துக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வீடுகளை மொய்த்து வருவதால் குழந்தைகள் அச்சமடைந்துள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனச் சுற்றியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். காம்பவுண்ட் சுவர்களில் கரப்பான் பூச்சிகளும்…