Indian Express Tamil
வரலாற்றில் முதல்முறை: 30 டிகிரி செல்சியஸில் கொதிக்கும் கடல் நீர்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
மத்திய பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு 30 டிகிரி செல்சியஸ் என்ற புதிய உச்சத்தை தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்டோபர் 22, 2026 அன்று பசிபிக் பெருங்கடலின் 'நினோ 3.4' பகுதியில் கடல் நீர் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் எட்டியுள்ளது. இதுவரை பதிவு செய்யப்பட்ட உலகளாவிய வானிலை தகவல்களிலேயே பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை இந்த அளவை எட்டுவது இதுவே முதன்முறையாகும். தீவிரமடையும் எல் நினோ 2026 பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் மேற்பரப்பு நீர் இயல்பை விட அதிக…