Maalaimalar
தீபாவளி பண்டிகை - தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பட்டாசு கடைகளுக்கு அனுமதி
தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு இதுவரை 12,098 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், 10 ஆயிரத்து 244 விண்ணப்பங்களுக்கு தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம். இதற்கு தீயணைப்பு, உள்ளாட்சி நிர்வாகம், காவல்துறை ஆகியோரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயம். இதில் தீயணைப்பு…