IBC Tamil
புத்தளத்தில் கர்ப்பிணிப் பெண் கொலை:கணவர் தப்பியோட்டம்
புத்தளம், சாலியவெவ, கும்புக்வெவ பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் (30) கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (03) இக்கொலை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் சாலியவெவ பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர். குடும்பத் தகராறு முற்றியதையடுத்து கணவரால் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கணவர் தப்பியோட்டம் குறித்த பெண்ணின் கணவர் அப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.