Indian Express Tamil
அரசு உதவி பெற ஆதார் தேவையில்லை; பயோமெட்ரிக், வாக்காளர் அடையாள அட்டை தான் முக்கியம்: ராஜீவ் ரஞ்சன்
எழுதியவர்: ஹரிகிஷன் ஷர்மா பயனாளிகளுக்கு அவர்களின் ஆதார் எண்களின் அடிப்படையில் பணம் வழங்கும் முறைக்கு பதிலாக விரைவில் அவர்களின் பயோமெட்ரிக் மற்றும் வாக்காளர் அடையாள எண்களைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க மத்திய பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சரான ராஜீவ் ரஞ்சன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'மக்கள் திட்ட பிரச்சாரம் 2026-27' தொடர்பான தேசிய பயிலரங்கில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய போது இந்த கருத்துக்களைத் தெரிவித…