Indian Express Tamil
டிஷ் வாஷ் லிக்விட் இருந்தால் போதும்... சுவர் முதல் மேக்கப் பிரஷ் வரை சுத்தம் செய்யலாம்; ஆனால் இந்தப் பொருட்களைத் தொடவே கூடாது
சமையலறையில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் பாத்திரம் தேய்க்கும் சோப்பு அல்லது டிஷ் வாஷ் லிக்விட் (Dish Wash Liquid), வீட்டைச் சுத்தமாகப் பராமரிக்கவும் பல வழிகளில் உதவுகிறது. பாத்திரங்களில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கு, உணவுக் கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்காகத் தயாரிக்கப்படும் இந்தத் திரவத்தைச் சரியான முறையில் பயன்படுத்தினால், சமையலறையைத் தாண்டி வீட்டில் உள்ள பல பொருட்களையும் சுத்தம் செய்யலாம். குறிப்பாக, அதிக வீரியம் கொண்ட ரசாயனங்கள் கலந்த விலையுயர்ந்த கிளீனர்களை வாங்குவதற்குப் பதிலாக, சிறிதளவு டிஷ் வாஷ் லிக்விட்டைப் பயன்படுத்தி சில பொருட்களை எளிதாகச் சுத்தம்…