Puthiya Thalaimurai
சக்கரங்கள் சொல்லும் கதை – 15 |தீபாவளிக்குப் பட்டாசு… காருக்கு ADASதான் மாஸ்!
ஒரு கற்பனைக் காட்சி: தீபாவளிக்குக் குடும்பத்துடன் சொந்த ஊர் செல்கிறீர்கள். முன்னால் செல்லும் கார் திடீரென வேகத்தைக் குறைக்க, நீங்கள் பிரேக் மிதிப்பதற்குள் காரே பிரேக் பிடிக்கிறது. காரில் இனிப்புப் பெட்டிகள்; பின்னிருக்கையில் தூங்கும் குழந்தை. காரே உதவிவிட்டால், உங்கள் கவனத்துக்கும் விடுமுறை கொடுக்கலாமா? அடுத்த சில கிலோமீட்டர்களில் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் சாலைத் தடத்தின் நடுவில் செல்லவும் அமைப்புகள் உதவுகின்றன. அப்போது கைப்பேசி ஒலிக்கிறது. அதைப்…