உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அமெரிக்காவில் முதன்முறையாக... வரலாற்று சாதனையைப் படைத்த கருப்பினப் பெண்!

அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தப் போவது யார்? என்ற பரபரப்புடன் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு இடைக்காலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சிக்கும், எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியுள்ளது. செனட் சபை, பிரதிநிதிகள் சபை என 2 அவைகளை கொண்ட அமெரிக்க நாடாளுமன்றத்தில், செனட் சபைக்கு 100 பேரும், பிரதிநிதிகள் சபைக்கு 435 பேரும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ள நிலையில், ஒரு மாகாணத்திற்கு தலா 2 செனட் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த…