Indian Express Tamil
ட்ரம்ப் தலையில் விழுந்த குட்டு; ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து பணியாற்ற தயார் என பேட்டி
அமெரிக்காவில் இடைக்கால தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இதில் அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அமெரிக்க இடைத்தேர்தல் முடிவுகள்: அதிபர் ட்ரம்ப் பின்னடைவு: ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் முன்னிலை அதாவது, 435 மக்களவை தொகுதிகளுக்கும், 100-ல் 35 செனட் தொகுதிகளுக்கும், 36 மாநிலங்களின் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை தொடர்ந்த நிலையில் சில தொகுதிகளின் முடிவுகள் இன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அசோசியேட்டட…