Samayam Tamil
Priyanka Deshpande valaikappu: பச்சை நிற பட்டுப்புடவையில் ஜொலிக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே! வளைகாப்பு ஆடை, பாரம்பரிய நகைகள் எப்படி?
சின்னத்திரை ரசிகர்களிடம் மிகவும் பரிட்சையமானவர் தொகுப்பாளிணி பிரியங்கா தேஷ்பாண்டே. 2025ல் வசி என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவின் புகைப்படங்களின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர் விழாவில் அணிந்திருந்த பாரம்பரிய பட்டுப்புடவையும், நேர்த்தியான அணிகலன்களும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.