Polimer News
பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை தாக்கிய உறவினர்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு - தாக்கிய 5 பேர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து பெண்களிடம் அத்துமீறிய நபரை தாக்கி கட்டிவைத்த நிலையில், போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அந்த நபர் உயிரிழந்தார். கீழக்கரை 500 பிளாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ரிஸ்வான் ஆஷிக் ரகுமான் என்பவர் மதுபோதையில் நுழைந்து அங்கிருந்த பெண்களிடம் அத்துமீறியதுடன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பெண்களின் கூச்சல் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து அத்துமீறிய நபரைத் தாக்கி கட்டி வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, 5 பேரை போலீசார் கைது செய்த…