உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தஞ்சாவூர் எம்.பி முரசொலி வீட்டில் கைவரிசை காட்டிய நபர்; சி.சி.டி.வி காட்சிகள் வைரல்

கோவை, திருச்சி ரோடு அருகே உள்ள வெங்கடலட்சுமி நகரில் குடும்பத்துடன் குடியிருந்து வரும் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வீட்டின் காம்பவுண்டுக்குள் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை மர்ம நபர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினரான முரசொலி, கடந்த 5 மாதங்களாக கோவை வெங்கடலட்சுமி நகர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 1- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9:30 மணி அளவில் இவரது வீட்டின் வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிள் ஒன்றை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாதுரியமாக திரு…