Indian Express Tamil
எங்களுக்கும் போனஸ் கொடுங்க; திருச்சி மாநகராட்சியிடம் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை
திருச்சி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பண்டிகை கால போனஸ் கேட்டு திருச்சி மாநகர் செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மாநகர் செங்கொடி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மணிமாறன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில், எஸ்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (வேதா) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பள்ளித் தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் என 2,200 பேர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு மாவ…