உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வசூல் வேட்டையில் வரலாற்றுச் சாதனை... வட அமெரிக்காவில் மட்டும் இம்புட்டு; பிரமிக்க வைக்கும் ஜெயிலர் 2 வசூல்!

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகளவில் ரூ.710.35 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் நடித்த ‘2.0’ படத்தின் வசூலை முந்தியுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டைத் தள்ளிவைக்குமாறு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 15-ம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 11-வது நாளான ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் ரூ.25.70 கோடி நிகர வசூலைப் பெற்றுள்ளதாக Sacnilk தெரிவித்துள்ளது. இதன் மூலம…