Indian Express Tamil
'கரூர் துயரம்; விஜய் அன்று வடித்த கண்ணீர்; சரியாக ஓராண்டு கழித்து அதே நாளில்...': அன்பில் மகேஷ் கைது தேதியில் இப்படி ஒரு ஒற்றுமையா?
பள்ளிக் கல்வித் துறை தொடர்பான முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நடந்த நாளில் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலித்த வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக…