Daily Thanthi
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதி உலா
நெல்லை, நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழாவின் ஒரு பகுதியாக, செப்பு தேரில் காந்திமதி அம்பாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, வீதி உலா நடந்து வருகிறது. 9…