Polimer News
சியோட்டாவுக்குக் கடலில் குதித்து நீந்திச் செல்ல முயன்ற அகதி..!
மொராக்கோ எல்லை வழியே ஸ்பெயினின் வட ஆப்பிரிக்க நகரமான சியோட்டாவுக்கு கடலில் நீந்திச் செல்ல முயன்ற அகதி ஒருவரை, மொராக்கோ போலீசார் படகில் துரத்திச் சென்று மீண்டும் பிடித்துக் கைது செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. சியோட்டாவில் தினசரி அதிகரிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் வருகை ஸ்பெயின் அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 70,000-க்கும் மேற்பட்ட அகதிகள் மொராக்கோவிலிருந்து சியோட்டாவுக்குள் ஊடுருவினர். 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இச்சிறிய துறைமுக நகரில், பல அகதிகள் இன்னும் தெருக்களிலும் குன்றுகளிலும் தங்கி வாழ்கின்றனர்.