Indian Express Tamil
'நீட் தேர்வை ரத்து செய்க': மத்திய அரசு குழுவிடம் விஜய் வலியுறுத்தல்
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை இன்று தலைமைச் செயலகத்தில், தேர்வுச் சீர்திருத்தங்களுக்கான உயர்மட்டப் பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி, உறுப்பினர்கள் பேராசிரியர் வி. காமகோடி, அனிதா கர்வால், சங்கர் மருவாடா ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, உயர்கல்விச் சேர்க்கைக்காக நடைபெறும் நீட் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது. நீட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளை எதிர்த்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்…